கியாமத்_நாளின்_அடையாளங்கள்* (பாகம்-0⃣5⃣)

உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பறவைகள் மற்றும் விலங்கினங்களை ஆய்வு செய்து அவை தமக்கிடையே பேசிக் கொள்வதை மனிதனும் விளங்கிக் கொள்ளக் கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

செருப்புகளுக்கு வாராகப் பயன்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பேசுவதை நாம் காண்கிறோம். ஒளி நாடாக்களிலும் குறுந்தகடுகளிலும் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

ஏதேனும் ஒரு பொருளை மக்களிடம் விற்பதற்கும் விளம்பரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கும் பேச்சுத் திறன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் இன்று பேச்சுத் திறன் ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது.

இவ்வளவு நேரம் பேசுவதற்கு இவ்வளவு ரேட் என்ற அளவில் அந்த வியாபாரம் நடக்கிறது.

இன்று ஆதரித்துப் பேசியதை நாளை எதிர்த்துப் பேசி நாளை மறுநாள் மீண்டும் ஆதரித்துப் பேசுகின்றனர். கொடுக்கின்ற காசுக்கா கவே இந்த இழிந்த நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றனர்.

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முஸ்லிம்கள் ஸலாம் கூறுவது நபிவழியாகும்.

நமக்கு எதிர்ப்படுபவர் அறிமுகமானவராக இருந்தாலும் அறிமுகமற்றவராக இருந்தாலும் ஸலாம் கூற வேண்டும். நபிகள் நாயகத்தின் இந்த வழி காட்டுதலை சமீப காலமாக முஸ்லிம்கள் புறக்கணித்து வருகின்றனர்.

நன்கு தெரிந்தவர்களைக் கண்டால் மட்டுமே ஸலாம் கூறுகின்றனர்.

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டதே பள்ளிவாசல்கள் என்பதை நாம் அறிவோம்.

பள்ளிவாசல் பக்கமே தலை வைத்துப் படுக்காத சிலர் பள்ளி வாசலுக்குள் புகுந்து அடுத்த தெருவுக்குச் செல்ல முடியும் என்றால் அதற்கு மட்டும் பள்ளிவாசலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

*நீங்கள் படித்து விட்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள்*

*உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்*

இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்…`l

தொகுப்பு: அபுதாஹிர

மயிலாடுதுறை