இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை அரசு மருத்துவமனையை நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாஷா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மருத்துவர்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஆகியோருடன் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா வார்ட் அமைப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர். அதிகாரிகளை துரிதமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர்.