குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இருபது நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பக்கம் வேலையிழப்பு, வேலையின்மை, அரைகுறை வேலை போன்ற காரணங்களால் வருமானத் திற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டி ருக்கின்றன. ஆனால் மறுபக்கம் மத்திய அரசின் எரி பொருள் நிறுவனங்களால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு நிலைகளை தொடர்ந்து உயர்த்துவதன் மூலம் குடும்பச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசின் தாராள மயக் கொள்கைகள்தான் இந்தத் தொடர் விலை யுயர்வுக்கு முதன்மைக் காரணமாகும். விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என வலியுறுத்துவதுடன், உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு விலையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங் களையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.