குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

பீர்க்கன்கரணை பகுதியில் சங்கிலி பறிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை, புதுபெருங்களத்தூர், சீனிவாசன்நகர், திருவள்ளுவர் தெரு, எண்.39/12 என்ற முகவரியில் சூர்யா, வ/23, த/பெ.குமார் என்பவர் வசித்து வருகிறார். சூர்யா கடந்த 18.08.2019 அன்று மாலை 05.30 மணியளவில் தன்னுடைய வீட்டின் அருகில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது, அவ்வழியே நடந்து வந்த மூன்று நபர்கள் மேற்படி சூர்யா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்செயினை பறிக்க முயன்றுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட சூர்யா தன்னுடைய செயினை இறுகபிடித்துக் கொண்டதால்
தங்கச்செயின் குற்றவாளிகளிடம் சிக்கவில்லை, செயின் பறிக்க முடியாததால் மூன்று குற்றவாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆனால் சூர்யா விடாமல் குற்றவாளிகளை துரத்திச்சென்று, செயின்பறிக்க முயன்ற நபர்களுள் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்து எஸ்- 14 பீர்க்கன்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பீர்க்கன்கரணை காவல் நிலைய காவலர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். எஸ்-14 பீர்க்கன்கரணை காவல் நிலைய காலவர்களின் விசாரணையில் பிடிபட்ட நபர் அஜித் வ/19, த/பெ.சுபாஷ், எண்.18, பஜனை கோயில் தெரு, கடப்பேரி ரோடு, மேற்கு தாம்பரம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜித் மீது தாம்பரம், சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய இருப்புப்பாதை காவல் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. தப்பியோடிய மற்ற இரண்டு குற்றவாளிகளை காலவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜித் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கி ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பொதுமக்களின் பணத்தை அபகரித்து வந்த கும்பலை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் தலைமையிலான 21 காவலர்களுக்கு பாராட்டு .

சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் ரோட்டிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் மையத்தில் பொருத்தப் பட்டிருந்த Skimmer கருவி மற்றும் ரகசிய கேமராவையும், கண்டறிந்து தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம்ஐ பராமரிக்கும் தனியார் நிறுவன ஊழியரான திரு.யுகராஜ் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் உத்தரவுப்படி மத்தியகுற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திரு.சி.ஈஸ்வரமூர்த்தி, இ.கா.ப அவர்களின் அறிவுரையின் பேரில், மத்தியகுற்றப்பிரவு துணை ஆணையாளர் திருமதி.G.நாகஜோதி அவர்களின் நேரடி கண்காணிப்பில் மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் துணை ஆணையாளர், திரு.K.சரவணக்குமார் அவர்களின் தலைமையில், உதவி ஆணையாளர்கள் திரு.D.ஆரோக்கிய ரவீந்திரன் திரு. ஜி.வேல்முருகன், ஆய்வாளர்கள் திருமதி.R.செல்வராணி, திரு.ஆர்.சுரேஷ்குமார், ஆர்.புஷ்பராஜ், உதவி ஆய்வாளர்கள் திரு.அசோக்தாமஸ்துரை, திருமதி.கே.ப்ரியா, திரு.தேவராஜ், திரு.அகிலன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கோபு, தலைமைக்காவலர்கள் திரு.ஜெகன் (த.கா.எண்.19917) திரு.சண்முகம், (த.கா.எண்.26801) திரு.மகேஷ் (த.கா.எண்.43849) முதல் நிலைக்காவலர் திரு.சதீஷ், (மு.நி.கா.எண்.26678) மற்றும் காவலர்கள் திரு.சதீஷ்குமார், (கா.எண்.29871), திரு.ராஜ்குமார், (கா.எண்.30663), திரு.சரவணன் (கா.எண்.40894), திரு.மாரிமுத்து (கா.எண்.44506) திரு.தியாகராஜன் (கா.எண்.50857), திரு.அன்சர் (கா.எண்.47213) ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. மேற்படி தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு சென்று தீவிர புலன் விசாரணை மேற்கொண்டும், வங்கி வாடிக்கையாளர்களின் பணம் முறைகேடாக எடுக்கப்பட்ட பல்வேறு வங்கி தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் மையங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும், வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்களை ஆராய்ந்ததிலிருந்தும், எதிரி இர்ஃபான், ஆ/வ 34, த/பெ.அப்துல் ரகுமான், எண்.132, திருமழை நகர், 1வது பிரதான சாலை, கொளத்தூர், சென்னை- 99, என்பவரும், அவரது கூட்டாளிகளும் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வங்கி தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் மையங்களில் Skimmer கருவி மற்றும் ரகசிய கேமராக்களை பொருத்தி வங்கி வாடிக்கை யாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை திருடி அதைக்கொண்டு போலி தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் கார்டுகளை தயார் செய்து, தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தை எடுத்தும் அதே போலி தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் கார்டுகளை அவர்களது கூட்டாளிகளான அல்லா பக்கஷ் ஆ/வ 37 த/பெ. பஷீர் ஹகமது, எண்.7A, 2-ம் தளம் குட்டித் தெரு, ஏழுகிணறு, சென்னை-01 மற்றும் அப்துல் ஹாதி, ஆ/வ 46, த/பெ. நூர்முகமது, எண்.26/27, ஹாதி அலி நகர், பதூர், மாங்காடு, சென்னை-122 ஆகியோரது பெயரில் போலியாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்குரிய (EDC) Swiping Machine மற்றும் அவர்கள் மூலமாக கொண்டுவரப்பட்ட வேறு கம்பெனிகளுக்குரிய (EDC) Swiping Machine-களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் வங்கி டிக்கையாளர்களின் பணத்தை திருடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி எதிரிகள் 3 பேரையும் கடந்த 23.07.2019 அன்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து மேற்படி வழக்கில் தொடர்புடைய இம்ரான், பசீருல்லா செரீப், ஷாம் (எ) சரவணன், புருஷோத், அஜ்மல் (எ) இப்ராகிம், அப்துல் மஜித், மொய்தீன் சல்மான் ஆகியோரையும்கைது செய்தனர் அவர்களிடமிருந்த Skimmer, Encoder, laptop, EDC Machine, போலி தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் Card, ரொக்கம் ரூ3,82,600/-, குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட Cell Phone மற்றும் 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 10 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில் மேற்படி குற்றவாளிகள் வெளி நாடுகளில் இருந்து திருடிய எலக்ட்ரானிக் தரவுகளை பதிவிறக்கம் செய்து, தங்களிடம் உள்ள தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் கார்டுகளில் பதிவேற்றி பல்வேறு தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரம் மற்றும் பிஒஎஸ் இயந்திரங்கள் மூலம் லட்சக்கணக்கில் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. மேலும் வங்கி வடிக்கையாளர்களின் டெபிட்/கிரிடிட் கார்டு விவரங்களைக்கொண்டு வெளிநாடுசெல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து லட்சக்கணக்கில் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. மேற்படி குற்றவாளிகள் திருடப்பட்ட கார்டு விபரங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.


கொரட்டூர் பகுதியில் வெளிமாநில வாலிபரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிய சிறுவன் உட்பட இருவரை பிடித்து போலீசார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், வ/22 என்பவர் புழல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் 19.08.2019 இரவு 11.45 மணியளவில் தனது நிறுவனத்தின் மேலாளர் சிவானந்தம் என்பவருடன் சேர்ந்து லாரியில் பொருட்களை ஏற்றிக்கொண்டு தனது நிறுவனத்திற்கு செல்லும் வழியில் பாடி, 200 அடி சாலையில் லாரியை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அவ்வழியாக TN-18-AU-3744 Bajaj Pulsar இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி மனோஜிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடனே மனோஜ் அவசர அழைப்பு எண் 100ல் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை போலீசார் கொரட்டூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரட்டூர் பால்பண்ணை அருகில் இரவு ரோந்து பணியில் இருந்த கொரட்டூர் காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கே.பலராமன் (HC 35470) திரு.ஐ.சீதாராமன் (HC 36593) மற்றும் எஸ்.முருகன் (Gr.I.PC.27262) ஆகிய மூவரும் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் இருவரும் மேற்படி மனோஜிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பிவந்தது தெரியவந்தது. அதன் பேரில் மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து டி-3 கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். டி-3 கொரட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சிரஞ்சீவி வ/19, த/பெ.கந்தசாமி, எண்-67, 18வது தெரு, காவாங்கரை, சென்னை என்பதும் மற்றொருவர் 17 வயதுடைய இளஞ்சிறார் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கைத்தொலைபேசி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் குற்றவாளி சிரஞ்சீவி மீது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. காவலர்கள், குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 4. இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை பிடித்து போலீசார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.எம்.முகமது புகாரி, தலைமைக்காவலர்கள் திரு.என்.கிருஷ்ணன் (HC 20265) மற்றும் திரு.எப்.சார்லஸ் (HC 26762) ஆகிய மூவரும் 19.08.2019 இரவு 11.00 மணியளவில் H-1 வண்ணாரப் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணன் ரவுண்டானா அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த TN-04-AS-9902 என்ற பதிவெண் கொண்ட Yamaha R-15 இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட இரண்டு நபர்களும் மேற்படி Yamaha R- 15 இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர்.. அதன் பேரில் இருவரையும் H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எச்-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1. கார்த்திக் (எ) வெள்ளை கார்த்திக், வ/ 25), த/பெ. வேலுச்சாமி, A-பிளாக், எழில் நகர், கொடுங்கையூர் 2.பாலாஜி வ/20, த/பெ.ராம்குமார் , எண்-371, 8வது பிளாக், சேனியம்மன் கோவில் தெரு, தண்டையார்பேட்டை என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கார்த்திக் (எ) வெள்ளை கார்த்திக் என்பவர் மீது T-1 அம்பத்தூர் மற்றும் T-3 கொரட்டூர் காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளதும், மற்றொரு குற்றவாளி பாலாஜி மீது H-3 தண்டையார்பேட்டை மற்றும் M-8 சாத்தாங்காடு காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். செயின் பறிக்க முயன்ற குற்றவாளியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த வாலிபர் சூர்யா மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 20.8.2019 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.