“குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்” 

குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்று குறித்து ஜூன் 4அன்று காணொலி வாயிலான நிகழ்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமான சிஎஸ்ஐஆரின் புதிய அமைப்பு சிஎஸ்ஐஆர்- அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சியின் தேசியக் கழகம் (என்ஐஎஸ்சிபிஆர்) ஏற்பாடு செய்திருந்தது. பெருந்தொற்றின் இரண்டாவது அலை பற்றியும்குழந்தைகளிடையே கொவிட்-19 தொற்றின் பாதிப்புஅச்சுறுத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நெறிமுறைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில விவாதிக்கப்பட்டது.  புது தில்லி கேந்திரிய வித்யாலயா சங்கதனின் (தலைமையகம்) கூடுதல் ஆணையர் டாக்டர் வி. விஜயலட்சுமி இந்த இணைய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவப் பிரிவு பேராசிரியரும்இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியின் நிர்வாக வாரிய உறுப்பினருமான டாக்டர் ஆர் சோமசேகர்சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார்.  முன் எப்போதும் இல்லாத வகையில் கொவிட்-19பெருந்தொற்றுவாழ்வின் அனைத்து நிலைகளையும் முக்கியமாக சமூக வாழ்வு மற்றும் குழந்தைகளின் மனநிலையைப் பெரிதும் பாதித்துவிளையாடுவதுநண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதுகல்வி பயில்வது போன்ற அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதாக டாக்டர் விஜயலட்சுமி கூறினார். குழந்தைகளிடையே கொவிட்-19: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்” என்ற தலைப்பில் பேராசிரியர் ஆர் சோமசேகர் விரிவான உரையை நிகழ்த்தினார். குழந்தைகளிடையே கொவிட் தொற்று மிதமாகவே காணப்படுவதாக அவர் கூறினார். இந்தத் தொற்றுக்கு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையிலும் பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்களாக இருப்பதுடன்வெறும் 1-2% பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரியவர்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு குறித்தும்அண்மைக் காலங்களில் குழந்தைகளிடையே இரைப்பை சம்பந்தமான அறிகுறிகள் அதிகரித்து வருவது பற்றியும் பெற்றோர்களுக்கு டாக்டர் சோமசேகர் எச்சரிக்கை விடுத்தார்‌  ஏராளமான பிரமுகர்கள்ஆசிரியர்கள்ஆராய்ச்சியாளர்கள்விஞ்ஞானிகள்பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் உட்பட சுமார் 150 பேர் முகநூலில் குறிப்பிடப்பட்டிருந்த இணைப்பின் வாயிலாக இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கொவிட்-19 தொற்று: அச்சுறுத்தல்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்