சென்னை, டிசம்பர். 7: குவைத் தொழிலதிபர் ஷைன்ஷா கான் இளைய மகள் ஷபானா அஃப்ரின் மற்றும் மணமகன் பிர்தௌஸ்கான் ஆகியோரது திருமணம் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் நேற்று நடைப்பெற்றது. விழாவில், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான்,
இ.யூ.மு.லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர், முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர், இ.யூ.மு.லீக் கட்சியின் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் காயல் மெஹபூப், இ.யூ.மு.லீக் கட்சியின் நிசாமுதீன், இப்ராஹிம் மக்கி மற்றும் இ.யூ.மு.லீக் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும் விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், ஆரிப் மீடியா காரைக்கால் ஆரிப் மரைக்காயர், வழக்கறிஞர் அமீர் ஜவகர், இராயப்பேட்டை ஹுசைன் பாஷா குறைஷி மற்றும் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.