கேரள சட்டமன்றத்தின் தீர்மானத்த்தை தமிழ்நாடு சட்டமன்றமும் நிறைவேற்ற வேண்டும் – இரா.முத்தரசன்

கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு, மாநில சட்டப் பேரவையில் “விவசாயி கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றிய அரசியல் பண் பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டி வரவேற் கிறது. மாநில சட்டமன்றக் கூட்டத்தை நடத்த ஒப்புதல் அளிக்க மறுத்த ஆளுநரின் முரண்பட்ட நிலையை எதிர்கொண்ட பினராயி விஜயன் அரசு, அதில் வெற்றி பெற்று, கூட்டப்பட்ட பேரவையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஒரே உறுப்பினரும் தீர்மானத்தை ஆதரித்து குரல் கொடுத்திருப்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் வாக்களித்திருக்கும் போது, தமிழகத்தில் அஇஅதிமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவது எந்த வகையிலும் மன்னிக்க முடியாத குற்றமாகும். கேரள சட்டமன்றம் கட்சி எல்லைகளை கடந்து விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஆதரித்து, ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பது போல் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தை நடத்தி, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.