கொரோனாவால் உயிரிழக்கும்தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு சமூகபாதுகாப்பு நிவாரணம் அறிவித்தது இந்திய அரசு

கொரோனா மரண சம்பவங்கள் அதிகரிப்பு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் நலன் பற்றி தொழிலாளர்களின்அச்சம் மற்றும் கவலையை போக்க, இஎஸ்ஐசி மற்றும்இபிஎப்ஓ திட்டங்கள் மூலமாக கூடுதல் பலன்களைமத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது. வேலை அளிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுஇல்லாமல், தொழிலாளர்களுக்கு கூடுதல் சமூகபாதுகாப்பு வழங்கப்பட மேண்டும் என கோரிக்கைஎழுந்ததை அடுத்து இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. தற்போது இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ் காப்பீடுசெய்யப்பட்ட தொழிலாளியின் மரணம் அல்லது முடக்கநிலைக்குப் பிறகு, அவரது சராசரி தினசரி ஊதியத்தில் 90 சதவீதம் அளவிற்கு ஓய்வூதியமாக அவரது வாழ்க்கைத்துணை, விதவைத் தாய் ஆகியோருக்கு வாழ்நாள்முழுவதும், குழந்தைகளுக்கு 25 வயது அடையும்வரையும், பெண் குழுந்தைக்கு திருமணம் ஆகும் வரையும்வழங்கப்படுகிறது. தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கீழ்கண்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

  1. இறந்ததொழிலாளியின் குடும்பத்தினருக்குகிடைக்கும் அதிகபட்ச பண பலன் ரூ.6 லட்சத்திலிருந்துரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 

  1. இறப்புக்குமுன்பு, உறுப்பினராக இருந்த ஒருதொழிலாளி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருந்தால், அவரது குடும்பத்தினருக்குகுறைந்தபட்ச உத்திரவாத பணப் பலன் ரூ.2.5 லட்சம்கிடைக்கும். இதற்கு முன்பு, இந்த விதிமுறை, ஒரேநிறுவனத்தில் தொடர்ந்து 12 மாதங்கள்பணியாற்றியிருக்க வேண்டும் என இருந்தது. அதுதற்போது மாற்றப்பட்டுள்ளது.  இது ஒரு நிறுவனத்தில்தொடர்ந்து ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்றநிபந்தனை காரணமாக பலன்களை இழக்கும் ஒப்பந்தம்/ சாதாரண தொழிலாளர்களுக்கு பயன் அளிக்கும்.  

 

  1. குறைந்தபட்சம்ரூ.2.5 லட்சம் இழப்பீடு விதிமுறை 2020 பிப்ரவரி 15ம் தேதி முதல் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. 

 

  1. 2021-22 முதல்2023-2024ம்ஆண்டு வரை வரும் 3 ஆண்டுகளில், இடிஎல்ஐ- நிதியிலிருந்து தகுதியானகுடும்ப உறுப்பினர்கள் பெறும்  காப்பீட்டு தொகைரூ.2185 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

 

  1. இந்ததிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 50,000 குடும்பங்கள்இழப்பீடு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில்10,000 பேர் கொரோனா காரணமாக இறக்கலாம் எனவும்மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் நல நடவடிக்கைள், கொரோனாகாரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின்குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். தொற்றுஏற்பட்டுள்ள சவாலான நேரத்தில், அவர்களை நிதிநெருக்கடியில் இருந்து காக்கும்.