கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடுத்தர தொழில்துறைக்கு ரூ. 3600 கோடி கடனுதவி

இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைக் ரூ.3,600 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்! இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை புனரமைப்பதற்காக உலக வங்கி 3,600 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதமும், ஏற்றுமதியில் 40 சதவீதமும் பங்கு வகிக்க கூடிய சுமார் ஐந்தரை லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உலக வங்கி இந்த கடனை வழங்க முன்வந்துள்ளது.
இந்தியாவில் முறையான கடன் பெறும் வசதியின்றி 40 சதவீத தொழில் நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.