கொரோனாவுக்கு மற்றுமொரு நடிகர் பலி

தொரட்டி  பட நாயகன் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்  கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார் , அவருக்கு வயது 43 , சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவரான அவர் தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள தொரட்டி படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரணமடைந்தது வருத்தத்திற்குரியது. அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்‌ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.
மக்கள் தொடர்பு: பூவன்.