23.05.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:
வார்டு 67 – ஜி.கே.எம். காலனி முத்துமாரியம்மன் கோவில் அருகில் 40,000 பேருக்கும், வார்டு 65 – குருகுலம் பள்ளியில் 40,000 பேருக்கும், வார்டு64 – எவர்வின் பள்ளியில் 40,000 பேருக்கும், வார்டு 68 – கோபாலபுரம் பள்ளி, மண்டலம் – 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 1785 பேருக்கும், அரிசி உள்ளிட்ட12 வகையான உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கும் பணியினைத் துவக்கி வைத்தார். அதோடு, வார்டு 66-இல் அமைந்துள்ள சட்டமன்ற அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் 2021-ல் கொளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற அயராது உழைத்த கழக நிர்வாகிகள் 36 பேருக்குச் சிறப்பு செய்தார்.