சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, செம்மஞ்சேரி – குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்பு பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஊரக தொழிற்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தனர். உடன், குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார் இ.ஆ.ப, மண்டலம் 15-ன் கண்காணிப்பு அதிகாரி வீர ராகவ ராவ் இ.ஆ.ப, அரசுத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் உள்ளனர்.