கொரோனா தொற்றில் சிகிச்சைப் பெற்றுவந்த காவல்த்துறையினரை ஆணையர் வரவேற்று கபசுரக்குடிநீர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய போக்கு வரத்து கூடுதல் ஆணையாளர் அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் வரவேற்று, உடல் நலம் குறித்து கேட்டறிந்து, பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும்,

சென்னை பெருநகர காவலில், பல்வேறு காவல் நிலை யத்தில் பணிபுரிந்த போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடி த்து, மருத்துவர் ஆலோசனைப்படி இன்று (07.9.2020) பணிக்கு திரும்பிய 19 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களு க்கு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வாழ்த்து க்கள் தெரிவித்து பாராட்டு சான்றிதழ் கள் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு கபசுர குடி நீர் வழங்கினார். சென்னை பெருநகர காவலில் இதுவரையில் 2,308 காவல் ஆளிநர்கள் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடித்து 1,921 காவல் ஆளிநர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ் ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கள் முனைவர் ஏ.அமல்ராஜ்,இ.கா.ப., (தலைமையிடம்), ஏ.அருண்,இ.கா.ப., (வடக்கு), பி.சி.தேன் மொழி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), சென்னை பெருநகர இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர் கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.