கொரோனா தொற்றில் சிகிச்சை பெறும் காவலர்களின் வீட்டுக்குச் சென்று ஆணையர் ஆறுதல் கூறினார்

​​சென்னை பெருநகரில் கொரோனா ஊரடங்குகாரணமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில்அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வோர் மீதுபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதுமேலும்காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாகனத் தணிக்கைமற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மக்களைநேரடியாக சந்தித்து வருவதால்காவல்துறையினர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகசென்னை பெருநகரஆயுதப்படை தலைமைக் காவலர் திரு.சதிஷ்பாபு, வ/49, (த.கா.17752) என்பவருக்கு கடந்த 14.5.2021ம் தேதிகொரோனா தொற்று ஏற்பட்டுகிண்டி Kings மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரைசென்னைபெருநர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்சென்னை பெருநகரஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.கே.சௌந்தரராஜன்அவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விவரம் அறிந்துகாவல் ஆணையாளர் அவர்களிடம் தெரிவித்ததன் பேரில்மேல் சிகிச்சைக்காக 19.05.2021 தேதி கிரீம்ஸ் ரோடுஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்

மேற்படி தலைமைக்காவலர் திரு.சதீஷ்பாபுவின்குடும்பத்தினர் வசித்து வரும் கீழ்ப்பாக்கம்லூத்தரல் கார்டன்காவலர் குடியிருப்பிற்கு இன்று (28.05.2021) காலை 11.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால்இ.கா.ப., அவர்கள் நேரில் சென்றுசதீஷ்பாபுவின் குடும்பத்தினர்களை சந்தித்து,  அவசரசிகிச்சை பிரிவில் இருந்து வரும் சதீஷ்பாபுவிற்கு தேவையானஅனைத்து உதவிகளையும் செய்திட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையர் திரு.கே.சௌந்தரராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.