கொரோனா தொற்று அதிகமுள்ள11 மாவட்டங்களில் 21ஆம் தேதி வரை இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படுமென அமைச்சர் பி கே சேகர்பாபு அறிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாடவாழ்க்கைக்கு போராடி வரும் நிலையில் அவர்களதுபசியினை போக்கும் விதமாகவும்அரசுமருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுகாரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள்அவர்களின் உதவியாளர்கள் மற்றும் உணவு தேவைப்படும்நபர்களுக்கு 12.05.2021 அன்று முதல் 14.06.21 வரைநாள்தோறும் ஒரு இலட்சம் உணவுப் பொட்டலங்கள்திருக்கோயில்கள் மூலம் வழங்கிடுமாறு மாண்புமிகுமுதலமைச்சர் வழிகாட்டுதல் படி, ஆணையிடப்பட்டுஉணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வந்தன

இதற்கான போதிய நிதி வசதி இல்லாததிருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைஆணையர் அலுவலகத்தில் பேணப்பட்டு வரும்அன்னதான மைய நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் 14.06.2021 முதல் 21.06.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்குநீட்டிக்கப்பட்டுள்ளது.  இக்கால கட்டத்திலும் திருக்கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின்மருத்துவ மனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டஉணவு தேவைப்படும் நபர்களுக்கு 21.06.2021 வரைதொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்பதனையும்இதற்கான கூடுதல் நிதி தேவைப்படும்திருக்கோயில்களுக்கு அன்னதான திட்ட மையநிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதையும்நிறைந்த மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.