மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை 186.15 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக பெறப்பட்டுள்ளது. பொது நிவாரண நிதியில் இருந்து ஏற்கனவே இரண்டு கட்டமாக தலா 50 கோடி ரூபாய் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களை, சிங்கப்பூர் மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து வாங்க 41.40 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.