கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க நாம்இப்போதே தயாராக வேண்டுமென்கிறார் பொதுசுகாதார முன்னாள் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி

ஊரடங்கினால் இப்போது கொரோனா தொற்று குறைந்துவருகின்றதுஇதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்குதளர்த்தப்பட்டால் தொற்று அதிகரிக்கும் என்பதுதான்அதாவதுபொதுமக்கள் அனைத்து நிலைகளிலும் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைக் கடைபிடிப்பதும் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்வதும் மட்டுமே உண்மையில் தொற்றைக்குறைக்கும்மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள்உள்ளன.  மூன்றாம் அலையின் தாக்கத்தையும் பாதிப்பையும்குறைக்க நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று தமிழ் நாடுஅரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனர் டாக்டர்.குழந்தைசாமி கேட்டுக்கொண்டார்மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு களஅலுவலகமும் விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து இன்று(1.6.2021) முற்பகல் நடத்திய கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம்அலையை எதிர்கொள்ளுதல் மற்றும் தடுப்பூசியின் அவசியம்என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோதுடாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.  கர்ப்பிணிகளை கொரோனா தொற்று ஏற்படாமல்பாதுகாக்க வேண்டும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளைவீட்டார் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்உறவினர்கள்அண்டை அயலார் கூட வரக்கூடாதுபிரசவத்துக்குப் பிறகுகுழந்தையைப் பார்க்கக்  கூட யாரும் வரவேண்டாம்பாலூட்டும்தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்கிராமத்தில் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகள் மூலம்தான் குடும்பம்குடும்பமாகத் தொற்று ஏற்படுகிறதுகோவிட்-19 இரண்டாம்அலையின் தாக்கம் இருக்கும் வரை தனித்து இருப்பதும்விசேஷங்களைத் தள்ளிப் போடுவதும் அவசியம் என்று டாக்டர்குழந்தைசாமி மேலும் தெரிவித்தார்சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும்மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல்தலைமை இயக்குனர் திருமா.அண்ணாதுரை தலைமை உரைஆற்றினார்.  இன்றைய நெருக்கடியான சூழலில்தான் அறிவியல்மனப்பான்மையின் தேவை உணரப்படுகின்றதுபகுத்தறிவுக்குஒவ்வாத கருத்துகளை மக்கள் புறந்தள்ள வேண்டும்அறிவியல்பூர்வமான உண்மையான தகவல்களை அடிக்கடிபகிர்ந்து கொள்ள வேண்டும்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்கிராமத்தில் இருக்கும் செவிலியர் மற்றும்அங்கன்வாடிப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுமுன்னுதாரணமாகத் திக வேண்டும் என்று அண்ணாதுரைகேட்டுக் கொண்டார்விழுப்புரம் நகர நல அலுவலர் டாக்டர்.பாலசுப்பிரமணியம் விழுப்புரம் நகரத்தில் இரண்டு நகர நலமையங்கள் மற்றும் இரண்டு பள்ளிக் கூடங்களில் தினசரிகொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது என்று தெரிவித்தார்.  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா.மாலாமுதல் அலையின் போது பெரும்பாக்கத்தில் செயல்பட்டகோவிட் சித்தா மையத்தில் சுமார் 1000 தொற்றாளர்கள் முழுகுணமடைந்தனர்இப்போது இரண்டாம் அலையிலும் இதுவரை525 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்மாவட்ட அலுவலர் திருமிகு எஸ்.கே.லலிதா அங்கன்வாடிப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடுதம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலஇயக்குனர் திருஜெ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார். மக்கள்தங்கள் பொறுப்புணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎப்போதும் கடைபிடிக்க வேண்டும் என்றும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள தயக்கம் காட்டவே கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணைஇயக்குனர் திருதி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும்விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 6100 பேருக்கு புதியதாககொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.  காணொலி கருத்தரங்கில் அங்கன்வாடிப் பணியாளர்கள்வளர் இளம் பெண்கள் மற்றும் கிராம மகளிர் என சுமார் 650 பேர்கலந்து கொண்டனர்.