கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

23.02.2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பணிகள் முடிவடைந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:

1. வார்டு 69 – திக்காகுளம் பகுதியில், ரூ.53 லட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைந்துள்ள சலவைக்கூடத்தில் புதியதாகத் தண்ணீர் தொட்டியுடன் கூடிய சலவை மேடை மற்றும் சலவைத் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் அறைகளுடன் கூடிய நவீன சலவைக்கூடம் திறந்து வைத்தார்.

2. வார்டு 69 – செம்பியம் லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கழகத் தலைவர் அவர்களின் சொந்த முயற்சியால் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு திடல், கூடைப் பந்தாட்ட கூடங்களைத் திறந்து வைத்தார்.

3. வார்டு 65 – ஜம்புலிங்கம் ரோடு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த பேட்ச் 2, 199 மகளிர்களுக்குத் தையல் இயந்திரம், சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி பெற்றுவரும் பேட்ச் – 3, 360 மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த பேட்ச் – 1, 196 மகளிர்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார். மொத்தம் 755 மகளிர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.

4. வார்டு 67 – சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.12.96 லட்சம் மதிப்பீட்டில் ஜெகநாதன் சாலையில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடம் திறந்து வைத்தார்.

5. வார்டு 66 – ஜவகர் நகர் முதல் வட்ட சாலையில், சென்னை மாநகராட்சி மூலதன நிதி ரூ.32.35 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் புதியதாகச் சறுக்கு விளையாட்டு திடல், நடைபாதை, மின்விளக்கு மற்றும் உள்விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைத்தார்.

6. வார்டு 64 – ஹரிதாஸ் தெரு தாமரைக் குளத்தில் சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட வண்ண விளக்குகளை எரியவைத்ததுடன், குளத்தையொட்டி நடைபாதை அமைக்கும் பணியைத் துவக்கி வைத்தார்.

தென்பழனி நகர் – திரு.வி.க.நகரில், சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் பூங்கா மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

7. வார்டு66 – ஜெயின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 6 ஆவது பேட்சாக டேலி பயற்சி முடித்த 87 மாணவிகளுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் 2 ஆவது பேட்சாக டேலி பயற்சி முடித்த 78 மாணவர்களுக்கு மடிக்கணினி, சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயற்சி முடித்த 733 மாணவ, மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.