புதுதில்லி, ஜூன் 29, 2020 கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,11,602 அதிகமாகும். இது வரை 3,21,722 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. 29.06.2020 அன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 58.67 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12,010 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். தற்போது 2,10,120 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். தற்போது, இந்தியா கொவிட்டை கண்டறியும் 1,047 பரிசோதனைச் சாலைகளை நாட்டுக்கு அர்ப் பணித்துள்ளது. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 760, தனியார் பரிசோதனைச் சாலைகள் 287. கடந்த 24 மணி நேரத்தில் சேர்க்கப்பட்ட 11 புதிய பரிசோதனைச் சாலைகள் அரசால் அமைக்கப்பட்டவை. நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 567 (அரசு : 362 + தனியார் : 205), ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 393 (அரசு : 366 + தனியார் : 27), CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 87 (அரசு : 32 + தனியார் : 55) ஆகும். பரிசோதனை செய்ய வேண்டிய மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 83,98,362 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 1,70,560 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான மற்றும் அண்மைத் தகவல்களுக்கு https://www.mohfw.gov.in/ and @MoHFW_INDIA என்ற இணையதளங்களைத் தவறாமல் பார்க்கவும்.