கோவிட் பெரும் தொற்றே தடயமக்களின் பயத்தே போக்க வைக்க வேண்டும் என்று சித்தமருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார்

கோவிட் பெரும் தொற்றே தடய மக்களின் பயத்தை போக்க வைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார். கோவிட் பெரும் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி உருவாக்க நல்ல சத்தான உணவு மிகவும் அவசியம் என்றார். கீரை சாப்பிடதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறிய அவர். இந்த பெரும் தொற்றுக்கு பயப்படக் கூடாது என்றார். இஞ்சி மிக பெரிய காயகல்பம் என்று கூறிய அவர் தினமும் காலையில் இஞ்சிச் சாரும் மதியம் சுக்கு பொடியும் இரவு கடும்கா பொடியும் சாப்பிடுவது நல்லது என்றார். நல்ல சத்தான உணவுதான் மிகசிறந்த மருந்து என்று சுட்டிக்காட்டிய அவர் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டாக வேண்டும் என்றார்.

இதில் தலைமை உரையாற்றிய தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு ஜே.காமராஜ் அனைவரும் கோவிட் தடுப்பூசியை போட்டு கொள்ளவேண்டும் என்றார். மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர் ஆரோக்கிய சேது செயலி www.cowin.gov.in இணையத்தளம் மூலம் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் பதிவு செய்து அரசு மருத்துவ மனைகளில் சென்று கோவிட் தடுப்பூசி எடுக்கலாம் என்றார். முதல் தடுப்பூசியும் இரண்டாவது தடுப்பூசியும் மருத்துவர்கள் அறிவித்த இடைவெளியின்படி கோவாக்ஸின் தடுப்பூசி 28 முதல் 44 நாட்கள் இடைவெளியிலும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி 12 வாரம் இடைவெளியிலும் போடவேண்டும் என்றார். இதில் நோக்க உரையற்றிய திருச்சி களவிளம்பர அலுவலர் திரு கே தேவிபத்மநாபன் கோவிட் பெரும் தொற்றை தடுக்க தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்றார். மக்கள் இந்த பெரும் தொற்றை கட்டுப்படுத்த நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். நாட்டில் 18 கோடிக்கு மேல் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறிய அவர் முதலில் முதியவர்களுக்கும் முன்களபணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறினார். கடந்த ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பின்னர் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருவதாக கூறினார். மத்தியஅரசு மாநிலங்களுக்கு இதுவரை 20 கோடி கோவிட் தடுப்பூசி இலவசமாக வழங்கியுள்ளதை அவர் சுற்றிக் காட்டினார். இந்த இணையதள கருதரங்கு திருச்சி களவிளம்பர உதவியாளர் திரு கே ரவீந்திரன் ஒருங்கிணைத்தார். திருச்சி மனத்தே சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணாக்கர் கரூர் பெரம்பலூர் திருச்சி அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு மருத்துவரிடம் கேள்விகள் கேட்டனர்.