மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 18.09.2019 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்களை பார்வையிட்டார். அதன்பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கொ. வீரராகவ ராவ்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு அரசு கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அதனடிப் படையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தின் மூலம் பட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைக் கவரும் வைகயில் பலவித வண்ணம் மற்றும் வடிவமைப்புகளில் பருத்தி பட்டு சேலைகள் படுக்கை விரிப்புகள் தலையணை உறைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் உடல் நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும் பாரம்பரிய ரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள் செட்டிநாடு சேலைகள் கைத்தறி சுங்கிடி சேலைகள் மதுரை தஞ்சாவூர் ஸ்லப் காட்டன் சேலைகள் ரூடவ்ரோடு காதா டிசைனர் போர்வைகள் பருத்தி மற்றும் பட்டு பரமக்குடி 1000 புட்டாச் சேலைகள் பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆடவர்களைக் கவரும் விதமாக லினன் சட்டைகள் லினன் ஃ பருத்தி சட்டைகள் பாலி விஸ்கோஸ் பேண்ட் கிளாத்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் விற்பனைக்கு உள்ளன. இராமநாதபுரம் மாவட்டத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் இராம நாதபுரம் பரமக்குடி என இரு நகரங்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனையின் மூலம் இராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் ரூ.64.07 இலட்சம் மதிப்பில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டில் ரூ.80 இலட்சம் அளவில் கைத்தறி ஆடைகள் விற்பனை செய்திடவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் ஆடைகளை மின் வணிக வலைதளமான இணைய தளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம். எனவே பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தரமான கைத்தறி ஆடை ரகங்களை பெற்று பயனடைவதன் மூலம் கைத்தறி நெசவாளா;களை ஊக்குவித்திடவும் வாய்ப்பாக அமையும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவராவ்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் திரு.ஜெ.நாகராஜன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.வி.ஜி.அய்யான் திருமதி கே.கே.சங்கீதா இரக மேலாளர் திரு.எஸ்.பாடலிங்கம் இராமநாதபுரம் விற்பனை நிலைய மேலாள் (பொ) திருமதி.கே.பாண்டியம்மாள் மேலாளர் (ஓய்வு) திரு.கே.மணிவண்ணன் உள்பட அரசு அலுவலர்கள் கோ-ஆப்டெக்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.