சசிகுமார் நடிப்பில் அனிஸ் இயக்கும் “பகைவனுக்கு அருள்வாய்”

கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. “பகைவனுக்கு அருள்வாய்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார். கதையின் நாயகனாக M.சசிகுமார் நடிக்க, நாயகிகளாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்: இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு மு.காசி விஸ்வநாதன், கலை விஜய் தென்னரசு, நடனம் தீனா, சண்டைப்பயற்சி ஆக்‌ஷன் நூர், மக்கள் தொடர்பு சதிஷ் (AIM) இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.