சசிகுமார் – நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம்” மார்ச் 12 ஆம் தேதி வெளியீடு

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ”ராஜ வம்சம்” படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை. நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் C. அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு. இந்த படத்தில் ராதாரவி தம்பி ராமைய்யா விஜயகுமா சதிஷ் மனோபாலா ரமேஷ்கண்ணா சிங்கம்புலி யோகிபாபு கும்கிஅஸ்வின் ஆடம்ஸ் சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ரமணி ராஜ்கபூர் தாஸ் நமோ நாராயணன் சுந்தர் சாம்ஸ் சமர் ரேகா சுமித்ரா நிரோஷா சந்தான லட்சுமி சசிகலா யமுனா மணிசந்தனா மணிமேகலை மீரா லாவண்யா ரஞ்சனா ரஞ்சிதா ரம்யா தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய சாம். சி,எஸ் இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் படத்தொகுப்பினை சபு ஜோசப் மேற்கொண்டுள்ளார் .நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார், தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா தயாரித்துள்ள ராஜவம்சம் மார்ச் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மக்கள் தொடர்பு: ரியாஸ் அகம்மது.