திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட மாடநாடா என்னும் கிராமம் தான் என் சொந்த ஊர். பள்ளிப்பருவம் எல்லாமே அங்குள்ள அரசு பள்ளியில் தான். பட்டப்படிப்பு சென்னையில் படித்தேன். ஒன்பது வயதில் விபத்து நடப்பதற்கு முன்பு நான் கலந்து கொண்ட பேச்சு போட்டி, ஓட்டப்பந்தயம் மற்ற அனைத்து விளையாட்டு போட்டியிலும் நான் தான் முதல் மாணவன். சைக்கிளால் எனக்கு ஒன்பது வயதில் ஒரு விபத்து ஏற்பட்டது. அது முறையான சிகிச்சை இல்லாததால் எனக்கு செயற்கை கால் பொறுத்தப்பட்டது. அது முதலே சாதிக்க வேண்டும் என்ற வெறி என் மனதில் ஆழமாக வேரூன்றியது.
எந்த சைக்கிள் மூலம் என் வாழ்க்கையில் வீதி விளையாடியதோ அந்த சைக்கிள் துறை மூலம் என் இடைவிடாத தன்னம்பிக்கை மூலம் உலக அளவில் நான் ஒரு நாள் பிரபலமாவேன் என்பது எனக்கு அப்போது தெரியாது. முதன் முதலில் தமிழ்நாடு முழுவதும் 2850 கிலோ மீட்டர் பரப்பளவை 140 மணி நேரத்தில் சைக்கிளில் சுற்றி சில சாதனை record brake பண்ணினேன். அதன் மூலம் guinness record, Limca Book record இல் என் பெயர் பதிவானது. பாராட்டு கடிதமும், வாழ்த்து மடலும் என்னை மென்மேலும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வழி வகுத்தது.
பட்டி தொட்டியெங்கும் என் பெயர் மட்டுமல்ல என் கிராமத்தின் பெயரும் அனைத்து பத்திரிக்கையிலும் வந்து என்னை மேலும் உற்சாகமூட்டின.
இந்தியா சார்பில் சர்வதேச விளையாட்டு போட்டியில் cyclicing பிரிவில் normal category இல் எத்தனையோ பேர் பங்கெடுத்து உள்ளனர். ipc category பிரிவில் நான் மட்டுமே இந்தியாவிற்காக முதன் முதலாக தேர்வானேன். ஜெர்மனியில் நடை பெற்ற அந்த உலக சாம்பியன் cyclicing போட்டியில் special champion தங்க பதக்கம் வென்றேன்.
தன்னம்பிக்கை இடை விடாத உழைப்பு இருந்தால் மட்டுமே இந்த உலகம் உங்களை ஒரு நாள் கொண்டாடும் என்பதை நான் அன்று உணர்ந்தேன். இன்று என்னை பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக பேச அழைக்கின்றனர். மாணவர்களுக்கு உந்து சக்தியாக என் பேச்சு இருக்கிறது.