நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி விடுவேன் என ஆபாசமாக ரித்திக் என்ற பெயரில் டிவிட்டரில் பதிவிடப்பட்டிருந்தது
சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த
நபர் குறித்து ஐ.பி. முகவரியை கொண்டு சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று சிஎஸ்கே அணி கேப்டன் தோனியின் மகளுக்கும் சமூக வலைதளத்தில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.