சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பது ஐக்கிய நாடுகள் சபையில் அமையப்பெற்ற ஒரே முத்தரப்பு மன்றம் ஆகும். உலக நாடுகள் அனைத்திலும் தொழிலாளர் சட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மரபுகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படை மூலமாகவே இயற்றப்படுகிறது.
அத்தகைய மரபுகள் மற்றும் பரிந்துரைகளின் மீளாய்வு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வளாகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அனைத்து மரபுமற்றும் பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து, விவாதித்து, ஆட்சிமன்ற குழுவின் பரிந்துரைக்கு அனுப்பும்.
இந்திய அரசின் பிரதிநிதியாக திரு. முத்துமாணிக்கம், துணை தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய தொழிலாளர் மற்றம் வேலை வாய்ப்பு அமைச்சகம்) மேற்கூறிய கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 187 நாடுகளை சேர்ந்த சர்வதேச தொழிற்சங்கங்கள், வேலை அளிப்போர் மற்றும் அரசாங்கங்கள் இந்த முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. இம்மாதிரியான பணிக்கு ஒரு துணை தலைமை தொழிலாளர் ஆணையர், இந்திய நாட்டின் பிரதிநிதியாக அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்று துணை தலைமை தொழிலாளர் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.