இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடியில் உள்ள தாழ்வான பகுதியான அண்ணாநகர் பகுதியில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். கடந்த சில தினங்களாக இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தொடா;ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 16 மழைமானிகளில் 11.01.2021 அன்று மொத்தம் 489.80 மி.மீஅளவும் சராசரியாக 30.61 மி.மீஅளவும் 12.01.2021 அன்று மொத்தம் 481.70 மி.மீஅளவும் சராசரியாக 30.11 மி.மீஅளவும் 13.01.2021 அன்று மொத்தம் 595.20 மி.மீஅளவும் சராசரியாக 37.20 மி.மீஅளவும் 14.01.2021 அன்று மொத்தம் 563.60 மி.மீஅளவும் சராசரியாக 35.23 மி.மீஅளவும் பதிவாகியுள்ளது. குறிப்பாக திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் நயினார் கோவில் கடலாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் சாயல்குடி பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாயல்குடி அண்ணா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று மழைநீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகையில் அண்ணா நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிவாரண முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் சுத்தமான குடிநீர் தரமான உணவு பால் போன்ற உணவு பொருட்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்நிவாரண முகாமில் பாதுகாப்பாக
தங்கி பயன் பெறலாம் என தொpவித்தார். இந்த ஆய்வின் போது கடலாடி வட்டாட்சியர் சீனிவாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.