சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணனின் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது, இம்முகாமில் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ, மாணவியரிடம் சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பின்னர் அவர்களிடம் சாலை விதிகள் பற்றிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் 30.01.2021 அன்று மாலை மெரினா கடற்கரை அணுகுசாலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பை துவக்கி வைத்தும், கடற்கரை மணல் பகுதியில் மணற் சிற்பத்தை திறந்து வைத்தும், மெரினா காந்தி சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து கானா பாலா பாடியுள்ள பாடலின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சென்னைபெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணன், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) S.லெட்சுமி, இ.கா.ப, போக்குவரத்து துணை ஆணையாளர்கள் (கிழக்கு) S.R.செந்தில்குமார், M.M.அசோக்குமார் (மேற்கு) போக்குவரத்து உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள், பி.எஸ்.ஏ பவுண்டேஷன் மற்றும் ஹேண்டிகேப் இன்டர்நேஷனல் இமேஜ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.