பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ ஐயப்பா மூவிஸ் நிறுவனங்கள் சார்பில் பொள்ளாச்சி எஸ்.மகாலிங்கம், டி.கண்ணன் மற்றும் ஆயிஷா அக்மல் இணைந்து தயாரிக்கும் படம் ‘மிக்ஸிங் காதல்’. இயக்குநர் என்.பி.இஸ்மாயில் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் ஷிண்டே நாயகனாக நடித்திருக்கிறார். சம்யுக்தா வின்யா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரேயா பாவ்னா, பிரியங்கா, திவ்யா, அம்பானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேஷ் மோகன் மற்றும் கோனேஸ்வரன் இசையமைத்துள்ளனர். கவித படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குநராக ஏ.கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். இஸ்மாயில் மற்றும் கோனேஸ் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக கார்த்திக் பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் இயக்குநர் என்.பி.இஸ்மாயில் பேசுகையில், “என் நிறுவனத்தின் பெயர் பிரண்ட்ஸ் பிக்சர்ஸ், எனவே என்னுடன் பணியாற்றும் அனைவரும் எனது நண்பர்கள் தான் அவர்கள் பணியாற்றுபவர்கள் என்று சொல்ல மாட்டேன். அனைவரும் சமமாக இருக்க வேண்டும், சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா கைவிடாது******
எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், என்று நினைப்பவன். இன்றைய நிகழ்ச்சிக்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்த நடிகைகள் அனைவரும் புதியவர்கள் என்று நினைக்க வேண்டாம், அவர்கள் அனைவரும் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்கள், தமிழில் தான் அவ்ர்கள் புதியவர்கள். படத்தை தயாரித்த கண்ணன் மற்றும் மகாலிங்கம் இவருக்கும் எதுவும் தெரியாது. நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள், என் மீது நம்பிக்கை வைத்து செய்தார்கள். சினிமா எப்போதும் நன்றாக தான் இருக்கிறது. நாம் சரியான பட்ஜெட்டில், சரியான நேரத்தில் ஒரு படத்தை முடித்தால் நமக்கு நிச்சயம் லாபம் கொடுக்கும். என்னுடைய படங்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கும், அதனால் தான் தொடர்ந்து படம் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். நம்மால் எவ்வளவு முடிமோ அதற்கு ஏற்றவாறு படம் பண்ண வேண்டும், அதை விட்டு விட்டு நம் தகுதிக்கு மேலான பட்ஜெட்டில் படம் பண்ணால் தான் நஷ்ட்டம் ஏற்படுகிறது. மாதம் ஒரு கோடி கொடுப்பதாக சொல்லி சினிமாவை விட்டுவிட வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் நான் செய்ய மாட்டேன். சினிமாவை உயிராக நேசிப்பவர்களை சினிமா ஒருபோதும் கைவிடாது, என்பது தான் என் கருத்து. என் படத்தின் கதாநாயகி சூப்பர் மாடல், ஆனால் எந்தவித பந்தாவும் இல்லாமல் நடித்தார். அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள். எல்லாருமே கூட்டு முயற்சியாக இந்த படத்தை முடித்து உங்கள் முன்பு வைத்துவிட்டோம். இதை மக்களிடம் பறிமாறுபவர்கள் மீடியா நண்பர்கள் தான். அவர்கள் எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், இந்த படத்திற்கும் அதை எதிர்பார்க்கிறேன். இந்த படத்தை கன்னடத்திலும் பண்ணியிருக்கோம். எனவே, இந்த படத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி வந்திருந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.