சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்றமுகவரியில் வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் ஏசிமெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (23.05.2021) மாலை சுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் மளிகை பொருட்கள் வாங்க நடந்து சென்றுகொண்டிருந்தபோது ரோட்டில் கவருடன் பணம் கீழே கிடந்ததை எடுத்து பார்த்தபோதுஅதில் பணம் ரூ.20000/- இருந்துள்ளது.
பணத்துக்கு உரிமையாளர் யார் என்று தெரியாததால் உடனே கரிமுல்லாஅப்பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில்நேர்மையாக காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளார். மேற்படி கீழே கிடந்த பணம்யாருடையது என்பது குறித்து H-6 ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்துவரும் நிலையில், நேர்மையாக கீழே கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில்ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரமாக, செயல்பட்ட கரிமுல்லாவை சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இணை ஆணையாளர் (வடக்கு) திரு.A.T.துரைகுமார்,இ.கா.ப., அவர்கள் நேரில்வரவழைத்து கரிமுல்லாவிற்கு பண வெகுமதி வழங்கி பாராட்டி கௌரவித்தார்.