சென்னை, பெரும்பாக்கம், முதல் மெயின் ரோடு, ராதா நகர், எண்.104, என்ற முகவரியில் இந்து, வ/35, க/பெ.மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11.08.2020 அன்று தனது வீட் டை பூட்டி விட்டு வெளியே போய்விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடை த்து யாரோ பீரோவிலிருந்த தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங் களை திரு டிச்சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து மேற்படி இந்து S-10 பள்ளிக்கரணை காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.T.சவரிநாதன், S-10 காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் C.ஷாம்வின் சென்ட், உதவி ஆய்வாளர்கள் இளங்கனி, R.ராஜேந்திரன், S-13 குரோம்பேட்டை தலைமைக் காவலர் S.பாஸ்கர் (தா.க.43387) S-7 மடிப்பாக்கம் தலைமைக் காவலர் ஜெபசிங், (தா.க.35712), S-12 சிட்லப்பாக்கம் முதல் நிலைக் காவலர் திரு.M.கலைச்செல்வன் (மு.நி.கா.48558) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.கமலக் கண்ணன், வ/51, த/பெ.தனபால், எண்.21, மலகண்டபுரம், 6வது தெரு, பல்லாவரம் 2.குமார், வ/44, த/பெ.பட்டுசாமி, எண்.4, பள்ளிக்கொண்டா தெரு, சோழிங்கநல்லூர் ஆகிய இருவரை கைது செய் தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், 5 கைக்கடி காரங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி இருவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலை யங்களில் 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக் கப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்து களவு சொத்தை மீட்ட மேற்படி தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, 19.8.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.