1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். நடராஜன் கடந்த 13.1.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. உடனே,
நடராஜன் இது குறித்து K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் A.கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் M.R.ராஜேஷ், தலைமைக் காவலர்கள் செந்தில் நாதன், (த.கா.20646), ஜெயமணி, (த.கா.43522) .குமரன் (28024) மாறன், (த.கா.24879), ஊர்க்காவல் படை வீரர்கள் கோவிந்தராஜு, சரவணன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதில் பதிவான குற்றவாளிகளின் அடையாளங்களை கொண்டு மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 1. கார்த்திக்குமார் (எ) எஸ்கேப் கார்த்திக், வ/32, த/பெ.பஸ்வாராஜு, கென்னூர், பெங்களூரு 2.பரத்குமார் (எ) பரத், வ/39, த/பெ.நடராஜ், எண்.40, நியூலிங்கராஜபுரம், பெங்களூரு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம்(ரூ.10,50,000/- (பத்து லட்சத்து ஐம்பதாயிரம்) பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி 2 நபர்களும் சேர்ந்து தொடர்ச்சியாக அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 5 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
2. எஸ்பிளனேடு பகுதியில் பேருந்தில் பயணிகளிடம் திருடிய 2 பெண்கள் கைது. 24 சவரன் தங்க நகைகள் பறிமுதல்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், வரதபாளை யம், பஜார் தெரு, எண்.2/64 என்ற முகவரி யில் வசிக்கும் சேகர், வ/65, த/பெ.ராம கோவிந்த செட்டியார் என்பவர் கடந்த 09.01.2021 அன்று ஆந்திராவிலிருந்து தங்க நகைகளை பாலிஸ் செய்வதற்காக சென்னை செங்குன்றம் வந்து தடம் எண்.242 மாநகர பேருந்தில் பயணித்து பிராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கி பையை திறந்து பார்த்த போது, பையில் வைத்திருந்த 27 சவரன் தங்க நகைகள் திருடு போயிருப் பது தெரியவந்துள்ளது. இது குறித்து சேகர் B- 2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. B-2 எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோவிந்த் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் R.சீனிவாசன், S.பாஸ்கரன், தலைமைக் காவலர்கள் E.பாரதிதாசன், (த.கா.21227), R.அன்பரசு, (த.கா.27474), முதல் நிலைக்காவலர்கள் S.முகமது (மு.நி.கா.43394), M.நௌசத் பாட்ஷா, (மு.நி.கா.39895), E. வினோத்குமார், (மு.நி.கா.31479), G.பரசுராம் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.நந்தினி, வ/27, க/பெ.சக்தி, எண்.22, அவ்வை நகர், ஆதிபான் தெரு, திருப்பத்தூர் 2.தீபா, வ/32, க/பெ.வெற்றி, அவ்வை நகர், ஆதிபான் தெரு, திருப்பத்தூர் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 24 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நந்தினி, தீபா ஆகிய இருவரும் சேர்ந்து பேருந்தில் பயணம் செய்யும் போது, பேருந்தில் சில்லறைகளை சிதற விட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி, பயணிகளிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. குற்றவாளி நந்தினி மீது உடுமலைப்பேட்டை, அடையார், சிவகாஞ்சி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும், தீபா என்பவர் மீது சிவகாஞ்சி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
3. இராயப்பேட்டை பகுதியில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண் உட்பட 2 நபர்கள் கைது. 64.5 சவரன் பறிமுதல்: சென்னை, கோபாலபுரம் வடக்கு 2வது தெருவில் வசித்து வரும் லோகேஷ், வ/27, த/பெ.தனஞ்செயன் என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். லோகேஷ் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்தபோது, சுமார் 65 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதால், பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், இது குறித்து லோகேஷ் E-2 இராயப் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தன் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. E-2 இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் G.விஜயலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் S.ரவிச்சந்திரன், K.கோபிநாத், தலைமைக் காவலர்கள் M.மாரி, (த.கா.43477) K.திலகவதி, (த.கா.27747) முதல் நிலைக் காவலர் G.வீரமணி (மு.நி.கா.39150) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் புகார்தாரர் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை செய்து வந்த நிலையில், அவரது வீட்டில் வேலை செய்து வந்த நந்தினி என்பவர் கடந்த 1 ½ வருடங்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்றதும் தெரியவரவே, காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, நந்தினியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், தஞ்சாவூரைச் சேர்ந்த நந்தினியின் கணவர் சென்னையில் வேலை செய்து வந்ததால், இருவரும் சென்னையில் வசித்தபோது, நந்தினி 2019ம் ஆண்டு முதல் லோகேஷ் வீட்டில் வேலை செய்து வந்ததும், அப்பொழுது, நந்தினியின் கணவருடைய மாமா கலியபெருமாள் என்பவரின் தூண்டுதலின் பேரில், லோகேஷ் வீட்டில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடி, இருவரும் மேற்படி நகைகளை அடமானம் வைத்து பணத்தை பெற்றதும், நந்தினி வேலையை விட்டு நின்றவிட்டு தஞ்சாவூருக்கு சென்று தலைமறைவானதையும் விசாரணையில் ஒப்புக் கொண்டார். அதன்பேரில், நந்தினி, வ/29, க/பெ.கார்த்திக், விலாங்குடி கிராமம், திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் அவரது மாமா கலியபெருமாள், வ/50, த/பெ.தங்கவேல், எண்.3, ரெக்ஸ் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லோகேஷ் வீட்டில் திருடிய 64.5 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேற்படி சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த
காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 13.3.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.