1.சைதாப்பேட்டை பகுதியில் கொள்ளை மற்றும் கிண்டி பகுதியில் இரட்டை கொலையில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது. 21 சவரன் தங்க நகைகள், கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் பறிமுதல்: கடந்த 13.03.2021 அன்று இரவு சுமார் 10.20 மணிக்கு சைதாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நந்தனம் விரிவு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் சிகிச்சை பெறுவது போல புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த மருத்துவரான திரு.ராமகிருஷ்ணன் வ/72, த/பெ.சுந்தரபாண்டி மற்றும் அங்கு இரவு பணியில் இருந்த 4 செவிலியர் களிடம் கத்தியை காட்டி மிரட்டி செவிலியர்கள் அணிந்திருந்த தங்கசெயின், வளையல், கம்மல், மோதிரம் உட்பட சுமார் 21 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிபொருட்களை பறித்துக்கொண்டும், மருத்துவருக்கு சொந்தமான காரையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து மருத்துவர் ராமகிருஷ்ணன் J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதன்பேரில், அடையாறு துணை ஆணையாளர் வி.விக்ரமன் மேற்பார்வையில், சைதாப்பேட்டை சரக உதவி ஆணையாளர் எஸ்.அனந்தராமன் தலைமையில், J-1 சைதாப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் தெய்வநாயகி, உதவி ஆய்வாளர்கள் வேணுகோபால், கண்ணன், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமர
பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்தனர், மேலும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் செல்போன்களை ஆராய்ந்து மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய ரவிகுமார் (எ) ராக்கப்பன், வ/42, த/பெ.அங்குசாமி, எண்.42, கல்லர் குளம், முத்தரசன் போஸ்ட், சிவகங்கை மாவட்டம் மற்றும் அவரது கூட்டாளிகளான .வெங்கடேசன் (எ) கறுக்கா வெங்கடேசன், வ/44, த/பெ.சத்தியநாதன், எண்.42, பல்லக்குமா நகர், மயிலாப்பூர் .நெல்சன் வ/47, த/பெ.பொன்னப்பன், எண்.69/4, ‘R‘பிளாக், கோட்டூர்புரம் .சீனிவாசன், வ 45, த/பெ.கந்தன், எண்.10/11, வைகை தெரு, சாந்தி நகர், அனகாபுத்தூர் .ஏழுமலை (எ) ரஜினி ஏழுமலை, வ/55, த/பெ.செங்கேணி, எண்.11, மேட்டுத் தெரு, அனகாபுத்தூர் ராஜசிங்கம் (எ) ராஜா, வ/33, த/பெ.துரைராஜ், எண்.2/29, உடையன்குளம், மானாமதுரை தாலுகா, சிவகங்கை மாவட்டம் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.
குற்றவாளிகளிடமிருந்து சைதாப்பேட்டை தனியார் மருத்துவமணையில் கொள்ளையடிக்கப்பட்ட 21 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் ஆகியவை கைப்பற்றப்பட்டது. விசாரணையில் முக்கிய குற்றவாளியான ரவிகுமார் (எ) ராக்கப்பன் மீது 5 கொலை வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், மேற்படி 6 நபர்களும் சேர்ந்து கடந்த 09.03.2021 அன்று இரவு சுமார் 7.00 மணிக்கு கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள காலியிடத்திற்கு தங்களுடைய முன்னாள் கூட்டாளிகளான அண்ணாதுரை மற்றும் அவரது நண்பர் தங்கபாண்டி ஆகிய இருவரையும் வரவைத்து பணதகராறு காரணமாக மேற்படி இருவரிடமும் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு இருவரின் உடல்களையும் கல்லால் கட்டி அருகில் இருந்த பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளது தெரியவந்தது. உடனே, இது குறித்து கிண்டி காவல் ஆய்வாளர் சந்துருவுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு வருவாய் துறையினர் முன்னிலையில் இறந்த நபர்களின் பிரேதங்கள் மேற்படி கிணற்றிலிருந்து தீயணைப்பு படையினர் மூலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து J-3 கிண்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 3 நபர்கள் கைது. 7.5 டன் குட்கா புகையிலை பொருட்கள், 1 டாரஸ் லாரி, 5 இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் விழிப்புடன் செயல்பட்டும், தீவிரமாக கண்காணித்தும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும், சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) மூலம் கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மாதவரம் துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ், தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் சதிஷ்குமார், அசோக் தலைமையில் தலைமைக் காவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்ட காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 21.3.2021 அன்று காலை சுமார் 07.00 மணியளவில் மொண்டியம்மன் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஆக்டிவா இருசக்கர வாகனம் மற்றும் இலகுரக சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, மேற்படி வாகனங்களை ஓட்டி வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், 2 வாகனங்களையும் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், குட்கா கடத்தி வந்த கஜேந்திரன், வ/40, த/பெ.சுப்ரமணி, எண்.4/4, பெருமாள் கோயில் தெரு, புதிய கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கஜா, வ/33, த/பெ.ராமச்சந்திரன், எண்.12, காட்டுக்குளம் எல்லையம்மன் கோயில் தெரு, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிட மிருந்து மேற்படி 1 இலகுரக சரக்கு வாகனம் மற்றும் 1 ஆக்டிவா இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து அண்டை மாநிலத்திலி ருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகளை லாரி மற்றும் சரக்கு வாகனங்களில் கடத்தி வந்து,
ஓரிடத்தில் வாகனத்துடன் மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் மீஞ்சூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று குட்கா புகையிலை பாக்கெட்டு களுடன் நிறுத்தி வைத்திருந்த 1 டாரஸ் லாரி, 4 இலகு சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்து, அங்கு மேற்படி குட்கா பாக்கெட்டுகளை காவல் காத்து வந்த ராஜி, வ/37, த/பெ.பாலு, எண்.57, பெருமாள் கோயில் தெரு, தேவம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். காவல் குழுவினர் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த மற்றும் பதுக்கி வைத்திருந்த கும்பலைச் சேர்ந்த 3 குற்றவாளிகளை கைது செய்து, 7,565 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 டாரஸ் லாரி, 5 இலகு ரக சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும், மேற்படி கும்பலுடன் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
மாதவரம் பகுதியில் பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற ஆதாய கொலை வழக்கில் அவ்வீட்டில் வேலை செய்து வந்த காவலாளி மற்றும் அவரது மனைவி கைது: சென்னை, மாதவரம், பொன்னியம்மன்மேடு, பி பிளாக், தணிகாச்சலம் நகர் மெயின் ரோடு, எண்.61 என்ற முகவரியில் ரவி, வ/47 என்பவர் அவரது மனைவி கலைவாணி, வ/41 என்பவருடன் வசித்து வந்தார். இவரது மகன் உமேஷ் என்பவர் புனேவில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரவி 20.3.2021 அன்று காலை சௌகார்பேட்டையில் உள்ள அவரது நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்காததால், மாலை சுமார் 04.30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் மனைவி கலைவாணி கை, கால்கள் கட்டப்பட்டும், வாயில் துணியை அடைத்தும், தலையில் இரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். மேலும், கலைவாணி அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த தங்க நகைகள் என 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50,000/- திருடு போயிருந்தது. இது குறித்து ரவி, M-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தும், பிரேதத்தை கைப்பற்றி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து ஆதாய கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் மேற்படி வீட்டில் காவலாளி யாக வேலை செய்து அங்கேயே மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் தங்கி வந்த வந்த ராகேஷ் தலைமறைவானது தெரியவந்தது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின்பேரில், மாதவரம் காவல் துணை ஆணையாளர் கிருஷ்ணராஜ் மேற்பார்வையில், M-2 மாதவரம் பால் பண்ணை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தலைமைக் காவலர்கள் நரேந்திரகுமார் (த.கா.35422), சௌந்தராஜன் (த.கா.24143) மற்றும் முதல்நிலைக் காவலர் தியாகராஜன் (மு.நி.கா.40289) ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, கொலை செய்துவிட்டு குடும்பத்துடன் தலை மறைவான குற்றவாளிகள் ராகேஷ், வ/31, த/பெ.நடராஜ், ஷோபாநகர், பெங்களூர், கர்நாடக மாநிலம் மற்றும் அவரது மனைவி ரேவதி, பெ/வ.25, க/பெ.ராகேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ.50,000/- பறிமுதல் செய்யப் பட்டது. விசாரணையில் குற்றவாளி ராகேஷ் சுமார் 15 நாட்களுக்கு முன்பு ரவியின் வீட்டில் பெயிண்ட் அடிக்க வந்ததாகவும், பின்னர் குடும்பத்துடன் கஷ்டபடுவதாக கூறி ரவியின் வீட்டில் காவலாளியாக வேலை செய்து, அங்கேயே ஒரு சிறிய அறையில் அவரது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளுடன் தங்கி வந்ததும், சம்பவத்தன்று ரவியின் மனைவி கலைவாணி தனியாக இருந்ததை அறிந்து அவரை கொலை செய்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், 22.3.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.