1. வேளச்சேரி பகுதியில் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திய 4 நபர்களை கைது செய்து 7 பெண்களை போலீசார் மீட்டனர். அடையார் காவல் துணை ஆணையாளரின் தனிப் படை யில் பணிபுரியும் ஆய்வாளர் E.இராமசுந்தரம், வேளச்சேரி காவல் நிலைய தலைமைக் காவலர் R.S.வெங்கடேசன் (தா.க18442), துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் S.சங்கர் (த.கா.32301) துரைப்பாக்கம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் M.சண்முகம் (மு.நி.கா 32729) மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலைய முதல் நிலைக் காவலர் P.பூர்ணகுமார் (மு.நி.கா.47317) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் 11.08.2020 அன்று வேளச்சேரி பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்த போது, அடையார் துணை ஆணையாளருக்கு வேளச் சேரி பகுதியில் சிலர் காரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை, தனிப்படை ஆய்வாளர் E.இராமசுந்தரதிற்கு தெரிவித்துள்ளார். அதன்பேரில் தனிப் படை போலீசார் வேளச்சேரி, அடையார் ஆனந்தபவன் அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது காரில் வந்த 2 பெண்கள் உட்பட 4 நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத் தின்பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் காரில் பாலியல் தொழில் செய்து வந்ததும், கோவிலம்பாக்கம், ரோஸ் நகரில் வீடு எடுத்து அங்கு பெண்களை தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கோவிலம்பாக்கம் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு பாலியல் தொழில் செய்த வந்த ஒரு பெண்ணை கைது செய்து விசாரணை செய்தனர். மேலும் அங்கு பாலியல் தொழில் செய்து வந்த 5 பெண்களை மீட்டனர்.
மேலும் விசாரணையில் குற்றவாளிகள் அளித்த தகவலின் பேரில் Locanto இணையதளம் மூலம் Escort Services என்ற ஆன்லைன் சென்டரை குன்றத்தூர் பகுதியில் நடத்தி வந்த முக்கிய குற்றவாளியையும் அடையார் துணை ஆணையாளர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகளை கைது செய்தும், பாலியல் தொழில் ஈடுபட்ட 7 பெண்களையும் மீட்டு ஜெ-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
ஜெ-7 வேளச்சேரி காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.மோகன், வ/33, த/பெ.மகாலிங்கம், எண்.75 E , கிழையூர் கிராமம், இளையான்குடி, சிவகங்கை மாவட்டம் 2.சுந்தர், வ/28, த/பெ.ஆனந்தன், எண்.3/46, முத்தாலம்மன் கோயில் தெரு, கொட்டிவாக்கம் 3.பூர்ணிமா, வ/21, க/பெ.தாமு, எண்.226, முதல் மெயின்ரோடு, ஜோதிமாநகர், முத்துமாரியம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, பாலியல் தொழிலுக்கு மூளையாக செயல்பட்ட
4.ராஜேஷ், வ/31, த/பெ.மலையன், எண்.4/428 ,கலைஞர் நகர், 4வது தெரு, நந்தம்பாக்கம், குன்றத்தூர் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 1 கார், 1 இருசக்கரவாகனம், 10 செல்போன்கள் மற்றும் ரூ.5,000/- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து பாலியல் தொழில் ஈடுபடுத்த வைத்திருந்த 7 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிய வந்தது. பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு பாலியல் தொழில் நடத்திய 4 குற்றவாளிகளை கைது செய்து 7 பெண்களை மீட்ட மேற்படி தனிப்படை போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 12.8.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.