கிண்டியில் நகைக்கடையில் நகைகளை திருடிய 3 ஊழியர்களை மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கைது செய்து, 78 சவரன் தங்க நகைகள் மீட்பு. சென்னை, பாண்டி பஜாரில் வசிக்கும் கமலேஷ்குமார் என்பவர் கிண்டி, தொழிற்பேட்டையில் நடத்தி வரும் J.C.Jewellers என்ற நகைக் கடையில் வேலை செய்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் கடையிலிருந்த 106.5 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிவிட்டது தொடர்பாக கடந்த 10.11.2020 அன்று கமலேஷ்குமார் J-3 கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப் பட்டது. மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்பு டைய குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தர விட்டதின் பேரில், அடையார் காவல் துணை ஆணையாளர் V.விக்ரமன் மேற்பார்வையில் கிண்டி சரக உதவி ஆணையர் சுப்பராயன் தலைமையில் J-3 காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் கர்ணன், உதவி ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் குற்றவாளிகள் மேற்குவங்காளத்தில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. உயர் அதிகாரிகளின் வழகாட்டுதலின் பேரில், காவல் குழுவினர் மேற்கு வங்காளம் சென்று அங்கு பதுங்கி இருந்த 1.சர்பிந்து சர்தார், வ/24, த/பெ. பெத்தோனார் சர்தார், பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம், 2.பசிருல்ஷேக், வ/26, த/பெ. சபூர்ஷேக், பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் ஆகிய 2 குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த மற்றொரு குற்றவாளியான 3.பிரசன் மது மண்டல், வ/26, த/பெ.கிருஷ்ணகாந்த், பர்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் என்பவரை கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மார்கோலி என்ற இடத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளிடமிருந்து 78 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலி கால் சென்டர் நடத்தி, லோன் பெற்று தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 2 நபர்கள் கைதானார்கள். தொலைபேசி இயந்தி ரங்கள்-7, செல்போன்கள்-3, கார்-1, பணம் ரூ.40,000/- பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, வேளச்சேரி, அன்னை இந்திரா நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் கணேஷ் சங்கர், வ/27 என்பவரின் செல் போன் எண்ணுக்கு அழைத்த நபர், ரிலைய ன்ஸ் நிப்பான் இன்சூரன்ஸ் நிறுவனத்தி லிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு பணம் தேவைப்பட்டால் ஆவணங்கள் சமர்ப்பித்து லோன் பெற்றுக் கொள்ளலாம் என்றும், லோன் பெறுவதற்கு லோன் தொகையில் 10 சதவீதத்திற்கு தங்களது நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.. இதனை நம்பிய கணேஷ் சங்கர், தனக்கு ரூ.4 லட்சம் லோன் தேவை யென கூறி, 3 தவணைகளில் ரூ.40,000/- செலுத்தி மேற்படி நிறுவனத்தின் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். ஆனால் பாலிசி எடுத்து சில மாதங்களாகியும், கணேஷ் சங்கருக்கு லோன் தராமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்ததால், கணேஷ் சங்கர் இது குறித்து J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டதின் பேரில் அடையார் துணை ஆணையாளர் V.விக்ரமன் மேற்பார்வையில் J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் ராஜிவ் பிரின்ஸ் ஆரூன் தலைமையில், புதிதாக 12 மாவட்டங்களில் துவக்கப்பட்ட சைபர் குற்றப் பிரிவுகளில் ஒன்றான அடையார் சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் மகாராஜன், கண்ணகி நகர் உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி, வேளச்சேரி உதவி ஆய்வாளர் தமிழ்செல்வி மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழு வினர், அடையார் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு காவல் குழுவினருடன் இணைந்து தொழிற் நுட்ப உதவியுடன் மேற்படி லோன் தருவதாக கூறிய நிறுவனத்தின் செல்போன் எண் மற்றும் தரைவழி இணைப்பு எண்களை ஆய்வு செய்து, விசாரணை செய்தனர். விசா ரணையில், பிரேம்குமார் என்பவர் மேட வாக்கம், சந்தோஷபுரம், வேளச்சேரி மெயின் ரோடு என்ற முகவரியில் பெரேக்கா பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் போலியான கால் சென்டர் நடத்தி வந்ததும், இவ்வலுவலகத்தில் தரைவழி தொலைபேசி எண்கள் மற்றும் செல்போன்கள் மூலம் வாடிக்கை யாளகளிடம் உடனுக்குடன் லோன் தருவதாகக் கூறி, லோன் தேவைப்படும் நபர்களை இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வைத்து, லோன் பெற்று தராமல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, பிரேம்குமாரின் மனைவி பென்னிஷா, பெ/வ.23, எண்.66, விஜிபி சீனிவாச நகர், முதல் மெயின் ரோடு, மாடம்பாக்கம், சென்னை மற்றும் கால் சென்டர் Team Leader விக்னேஷ், வ/23, த/பெ.பாபு, எண்.27, அங்காளம்மன் கோயில் தெரு, முகையூர், கல்பாக்கம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கால் சென்டரில் பயன்படுத்தி வந்த தரைவழி தொலைபேசிகள்-7, செல்போன்கள்-3, கார்-1 மற்றும் பணம் ரூ.40,000/- பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவுவான முக்கிய குற்றவாளி பிரேம்குமாரை பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளனர். மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் 16.12.2020 அன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.