பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப் படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொறியியல் சாதனங்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. உலக சந்தையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு குறைந்துவரும் வேளையில், இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொறியியல் சாதனங் களின் அளவு, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு 58 சத வீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு உட்பட்ட பொறி யியல் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் உட்பட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொறியியல் பொருட்கள், சீனாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 176 புள்ளி 94 மில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த ஏற்றுமதி 112 புள்ளி 20 மில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது
57 புள்ளி 70 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொறியியல் சாதனங்களின் அளவு அதிகரித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது என இந்திய பொறியியல் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சிலின் தலைவர் திரு. ரவி ஷெகால் தெரிவித்துள்ளார்.