“கதைதான் ராஜா” எனும் வெற்றி சூத்திரம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. இதை முழுதாக நம்புபவர்கள் அதை கடைப்பிடித்து அவர்களின் வெற்றிக் கனவை எளிதாக வென்றிருக்கிறார்கள். இந்த சூத்திரத்தை கடைப்பிடித்து வெளிவரும் அனைத்து படங்களுமே மொழி எல்லைகள் கடந்து அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் படைப்பாக மாறியுள்ளது. அந்த வகையில் பெரும் கனவுகளுடன் Lendi Studios சார்பில் S .ஐஸ்வர்யா தயாரிப்பாளராக கோலிவுட்டில் தன் திரைப்பயணத்தை துவங்கியிருக்கிறார். இவரது அறிமுகத் தயாரிப்பான “புரடக்ஷன் நம்பர்.1” படம் இயக்குநர் சுசீந்தரன் இயக்க நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் 30 வது திரைப்படமாக உருவாகியுள்ளது. மீனாட்சி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய்
ப்ரின்ஸ், அருள் தாஸ், இயக்குநர் முக்தார் கான் ஆகியோருடன் மேலும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். Lendi Studios தயாரிப்பாளர் S .ஐஸ்வர்யா கூறியதாவது.
Lendi Studios உடைய முக்கிய குறிக்கோள் என்பது நேர்த்தியான வகையில் தரமான படைப்புகளை தருவதென்பதே ஆகும் அந்த வகையில் அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான அழகான கதையுடன் இயக்குநர் சுசீந்தரன் சார் எங்களை அணுகியது பெரும் மகிழ்ச்சியை தந்தது. தரமான கதைக்களம் கொண்டுள்ள இப்படம் எங்களது முதல்
தயாரிப்பாக உருவாவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. முழு நேர்த்தியுடன் தரமான படங்களாகவும், அதே நேரம் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் படியான படைப்புகளை தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் தயாரிப்போம். எங்கள் தயாரிப்பில் உருவாகும் முதல் படைப்பு நடிகர் ஜெய்யின் 30 வது திரைப்படமாகவும் உருவாவது
மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது. எங்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டுவிட்டது படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு மற்றும் திரைப்பட வெளியீட்டு தேதிகள் மிக விரைவில் வெளியிடப்படும் என்றார்.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் ஜெய் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். R. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும்
பணியாற்றியுள்ள தொழில் நுட்ப குழுவினர் விபரம்:
படத்தொகுப்பு – M காசி விஸ்வநாதன்
கலை இயக்கம் – B சேகர்
நடனம் – ஷோபி பால்ராஜ்
சண்டைப்பயிற்சி – தினேஷ் காசி
பாடல்கள் – வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி
இணை இயக்கம் – தமிழ். திருப்பதி ராஜா, T. இளங்கோ
கலரிஸ்ட் – ரகுநாத் வர்மா
ஒலி வடிவமைப்பு – ராஜா கிருஷ்ணன்
டிஐ – B24
விஷுவல் எபெக்ட்ஸ் – பேப்பர் ப்ளேன்
பப்ளிசிட்டி டிசைன் – தண்டோரா
புரடக்சன் மேனேஜர் – பெருமாள், சுகிதன்
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – S. அஜய் பிரவீன் குமார்.
மக்கள் தொடர்பு டி.ஒன்.