சுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய எஸ் ஏ பாஸ்கரன், இத்திரைப்படத்தை திரைகதை எழுதி இயக்குகிறார். மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார துறையில் இன்று மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் இத்திரைப்படம். ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேசுடன் இணைந்து சார்லி, கிஷோர், வினோத் கிருஷ்ணன், அஜய் கோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிக்கி சுந்தரம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் கலையின் மீது உள்ள
ஆர்வத்தால், இங்கு வந்து தமிழ் படித்து இந்த படத்திற்கு தேவையான வகையில் முழு ஈடுபாட்டுடன் தன்னை தயார்படுத்தி கொண்டுள்ள விதம் குழுவினரால் பாராட்டப்படுகிறது.
கதை கதாபாத்திரம் மற்றும் தன் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வரியா ராஜேஷ் இப்படத்தின் கதை மற்றும் தனது கதாபத்திரத்தின் வலிமையும் முக்கியத்துவமும் கண்டு புது முகத்துடன் இணைந்து நடிக்கிறார். வி என் மோகன் ஒளிப்பதிவு செய்ய பிரீத்தி மோகன் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். கலை செந்தில் ராகவன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வாழ் பிரித்வி குமார் இப்படத்திற்கு இசை அமைக்க அணில் ஜான்சன் அதற்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.
நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்: நிக்கி சுந்தரம், ஐஸ்வரியா ராஜேஷ், சார்லி, கிஷோர், அஜய் கோஷ்,வினோத் கிருஷ்ணன், E.ராமதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், ஜார்ஜ் மரியான், அருள் D ஷங்கர், அபிஷேக் வினோத், தங்கதுரை, மதன், கோபால், A.S.ரவிபிரகாஷ், ஜெய்ஶ்ரீ.
தயாரிப்பு: சுந்தரம் புரொடக்ஷன்ஸ், நிர்வாக தயாரிப்பு: வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ், தயாரிப்பு உறுதுணை: சித்தாரா சுரேஷ் இசை: பிரித்வி குமார், படத்தொகுப்பு: பிரீத்தி மோகன், கலை: செந்தில் ராகவன், ஒளிப்பதிவு: VN மோகன், பின்னனி இசை:அனில் ஜான்சன், பாடல்கள்:கிருஷ்டோபர் பிரதீப், ஆடியோகிராபி: M.R.ராஜகிருஷ்ணன், நடனம்:விஜி சதிஷ், ஸ்டண்ட்: மகேஷ் மேத்யு, உடைகள்: தாரா மரியா ஜார்ஜ், கதை வசனம் இணை இயக்கம்: சேந்தா முருகேசன், திரைகதை, இயக்கம்: எஸ்.ஏ.பாஸ்கரன்