நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து, வெற்றி பெறும் போது தான் அவனது படைப் புலகம் பூரணத்துவம் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக (Sakthi film factory signature release) இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்ட றிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுப வங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக நல்ல படமாக இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “சில்லுக்கருப்பட்டி” படத்தின் மீதான ஈர்ப் பில் அப்படத்தின் உரிமையை பெற்றுள்ளார் 2D Entertainment நிறுவன CEO ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளி யீடு ( Sakthi film factory signature release ) என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட, சினிமாவை பெரும் காதலுடன் அணுகும் படங்களை மட்டும், மிக கவனமுடன் தேந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு, பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும். இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் “சில்லுக்கருப்பட்டி” என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப் படத்தை மிகச்சரியான தேதியில் மிகப்பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்ட மிட்டு பணியாற்றி வருகிறோம் என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிர்வாகி சக்தி வேலன். இயக்குநர் ஹலிதா சமீம் கூறியதாவது… நான் மிகப்பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன் “சில்லுக்கருப்பட்டி” படத்தினை பார்த்த மாத்திரத்தில் சூர்யா சார், ஜோதிகா மேடம் இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி தரும் விசயம் எங்களுக்கு ஏதுமில்லை என்றார். “சில்லுக்கருப்பட்டி” நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். Divine Productions சார்பில் வெங்கடேஷ் வேலினீனி இத்திரைப் படத்தை தயாரித்துள்ளார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன். சாரா அர்ஜீன், மணிகண்டன் K, நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.