சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி

சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவ்வகுப்பின் மாணவிகள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து பள்ளியின் நிர்வாகம் ஆசிரியர் ஆனந்தனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.  பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து  சர்ச்சையில் சிக்கியது சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி.