சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து
நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சென்னையில் முக்கிய இடங்கள் மற்றும் சந்திப்புகளில் வாகன தணிக்கை செய்யப்பட்டு போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, புளியந்தோப்பு சரக காவல் உதவி ஆணையாளர் T.பிரகாஷ்குமார் தலைமையில் P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் C.வேலு, உதவிஆய்வாளர் T.முருகானந்தம், தலைமைக்காவலர் D.குமரேசன் (த.கா.33005), முதல் நிலைக்காவலர்கள் K.கிருஷ்ணமூர்த்தி, (மு.நி.கா,31750) K.சீதாராமன், (மு.நி.கா.28073) ஆயுதப்படை காவலர்கள் மருது பாண்டியன் (42134) சரத்குமார் (50471) ஊர்க்காவல் படை வீரர் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் 03.10.2020 அன்று அதிகாலை 3.00 மணியளவில் புளியந்தோப்பு, பட்டாளம் மீன் மார்கெட் அருகில் கண்காணித்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக ஆட்டோ மற்றும் டாடா ஏஸ் வாகனத்துடன் வந்து இறங்கிய 5 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை சோதனை செய்த போது ஆட்டோவில் 25.3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பேரில் 5 நபர்களையும் கைது செய்து P-1 புளியந்தோப்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.பன்னீர்செல்வம் வ/38, த/பெ.சுப்பிரமணி, எண்.462 கே.பி.பார்க் 10வது பிளாக், புளியந்தோப்பு 2.கணேஷ் (எ) புருஷோத்தமன், வ/35, த/பெ.வெங்கட்ராமன், எண்.148 புளியந்தோப்பு 3.சதிஷ்குமார் வ/36, த/பெ.பழனி, எண்.133 அன்னை சந்தியா நகர், தண்டையார் பேட்டை4.சங்கர், வ/36, த/பெ.சுந்தரலிங்கம், எண்.42, கிருஷ்ணா தெரு, கானாத்தூர், 5.செல்வம் வ/40, த/பெ.சுப்பையா, எண்.154/4, தண்டு மாரியம்மன் கோயில் தெரு,
நைனார்குப்பம், உத்தண்டி, செங்கல்பட்டு மாவட்டம் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 25.3 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள், 1 டாடா ஏஸ் லோடு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். கஞ்சா விற்பனை குற்றவாளிகளை கைது செய்த புளியந்தோப்பு தனிப்படை காவல் குழுவினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.