சென்னை காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பு 6 அடுக்கு பாதுகாப்பு முககவசம், திரவ சுத்திகரிப்பான்கள் மற்றும் முக பாதுகாப்பு கேடயம் அடங்கிய தொகுப்புகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தமிழக அரசு மூலமாக கொரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணிபுரியும் ஊர்காவல் படையினர்க்கு என மொத்தம் 23 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு ஒரு நபருக்கு தலா 3 முகக்கவசங்கள் (6 அடுக்கு மீண்டும் பயன்படுத்தக்கூடியது), 5 திரவ சுத்திகரிப்பான் பாட்டில்கள் மற்றும் ஒரு பாதுகாப்பு கேடயம் (Face Shield) அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

இதன் முதல் கட்டமாக இன்று (07.10.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், கலந்து கொண்டு, சென்னை மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார். மேற்கு மண்டல காவல் ஆளிநர்கள் சார்பாக அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் டாக்டர். . தீபா சத்யன், கிழக்கு மண்டலம் சார்பாக அயனாவரம் சரக உதவி ஆணையாளர் சீனிவாசன் ஆகியோர் முககவசங்களை பெற்றுக் கொண்டனர். மேலும் உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் முக கவசங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர்.A.அமல்ராஜ், (தலைமையிடம்), இணை ஆணையாளர் S.மல்லிகா, (தலைமையிடம்), நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் S.விமலா, K.ஶ்ரீதர்பாபு, மத்தியகுற்றப்பிரிவு துணை ஆணையாளர் G.நாகஜோதி, துணை ஆணையாளர் (நிர்வாகம்) பெரோஷ்கான் அப்துல்லா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.