சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அறிவுரையின்பேரில் சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து முக்கிய இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், பொதுமக்கள் அதிகளவு கூடுமிடங்களில் சென்னை பெருநகர காவல் சார்பில் கொரேனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 20.3.2021 அன்று காலை, வடபழனி சரக உதவி ஆணையாளர் ராஜசேகரன் மேற்பார்வையில், R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள்,
அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட (NSS) மாணவர்களுடன் ஒருங்கிணைந்து, வடபழனி பேருந்து நிலையம் மற்றும் வடபழனி, 100 அடி சாலை சந்திப்பு ஆகிய 2 இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.
இம்முகாமில், ஒலி பெருக்கி மூலம் கொரோனா தொற்றின் பாதிப்புகள், கொரேனா தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், திரவ சுத்திகரிப்பான் மற்றும் சோப்புகளை கொண்டு அடிக்கடி கை கழுவுதல், பொது இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல் இவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டது. மேலும், காய்ச்சல் குறித்த சந்தேகங்கள் இருந்தால், தனிமைபடுத்திக் கொள்ளவும், அருகிலுள்ள சுகாதார மையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. இதே போல, T-6 ஆவடி காவல் நிலைய ஆய்வாளர் திரு.காளிராஜ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள், அப்பகுதியிலுள்ள பள்ளிகளின் தேசிய மாணவர் படையில்(NCC) உள்ள மாணவ, மாணவிகளுடன் ஒருங்கிணைந்து, ஆவடி மார்க்கெட், நகராட்சி பள்ளி அருகில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், கொரேனா தொற்று குறித்த அறிவுரைகள், கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்கரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம், திரவ சுத்திகரிப்பான் பயன் படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எடுத்துரைக் கப்பட்டது. மேலும், முகக்கவசம் அணியாமல் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.