சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் 14.06.2020 அன்று கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ள, நுங்கம்பாக்கம், காமராஜபுரம் 3வது தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியிலுள்ள காவல்
அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள, F-5 சூளைமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூளைமேடு, சௌராஷ்டிரா நகர் 8வது தெருவிற்கு சென்று ஆய்வு செய்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈஸ்வரதாஸ் கோயில் தெருவிற்கு சென்று கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களிடம் குறைகள் கேட்டறிந்து, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுரைகள் கூறினார். மேலும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிப்பு அடைந்து சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐஐடி வளாகத்திற்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வுகளின்போது, கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜ்,இ.கா.ப., காவல் அதிகாரிகள் மற்றும் மற்றும் காவல் ஆளிநர்கள் உடனிருந்தனர்.