சென்னை, பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளியில் +2 படித்து வரும் மாணவி குனிஷா தனது சேமிப்பு பணம் மற்றும் அவரது முயற்சியால் சேகரித்த பணத்தின் மூலம் 2 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, உப்பு உள்ளிட்ட 1,000 மளிகை தொகுப்புகளை வாங்கி ஏழைகளுக்கு வழங்க முன்வந்தார். 03.08.2020 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், முன்னிலையில் மேற்படி பத்ம சேஷாஸ்திரி பால பவன் பள்ளி மாணவி குனிஷா அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை சென்னை பெருநகர காவல் நிலையங் கள் மற்றும் காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.
மேலும் பேசின்பாலம், கன்னிகாபுரம், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழைமக்கள் 1,000 பேருக்கு மேற்படி மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச் சியில், இணை ஆணையாளர் (தலைமையிடம்) S.மல்லிகா, துணை ஆணையாளர்கள் ஆர். திருநாவுக்கரசு, (நுண்ணறிவுப்பிரிவு) M.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) விமலா, (தலைமையிடம்), K.பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.