சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் ஆளிநர் களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் மற்றும் திரவ சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தில்லியை தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் FICCI (Federation of Indian Chambers of Commerce and Industry) அமைப்பின் பெண்கள் அமைப்பினர் FLO – FICCI’s Ladies Organisation] கொரோனா தொற்று காலத்தி லும் சிறப்பாக காவல் பணியில் ஈடுபட்டு வரும் சென்னை பெருநகர காவல், பெண் காவல் ஆளி நர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு முகக்கவசங்கள்-20,500, திரவ சுத்திகரிப்பான்-250 லிட்டர் மற்றும் கையுறைகள் வழங்க முன்வந்தனர்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., 28.8.2020 அன்று காலை, காவல் ஆணையரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேற்படி FLO அமைப்பின் தலைவர் (Chairperson) ரிங்கு மெச்சேரி, செயலாளர் பிரசன்ன வசனடு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இவ்வமைப்பினர் வழங்கிய முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான் மற்றும் கையுறைகளை பெண் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஏ.அமல்ராஜ்,இ.கா.ப., இணை ஆணையாளர் (தலைமையிடம்) எஸ்.மல்லிகா,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), பெரோஸ்கான் அப்துல்லா, இ.கா.ப., (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.