சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், 03.10.2020 அன்று காலை T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தும், ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சாவுடன் குற்றவாளிகளை கைது செய்து 23.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த புளியந்தோப்பு காவல் சரக உதவி ஆணையாளர் T.பிரகாஷ்குமார் தலைமையிலான காவல் குழுவினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று பார்வையிட்டு காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மேற்கு மண்டல இணை ஆணையாளர் C.மகேஷ்வரி, அம்பத்தூர் துணை ஆணையாளர் மருத்துவர் தீபா சத்யன், புளியந்தோப்பு துணை ஆணையாளர் S.ராஜேஷ்கண்ணா, மற்றும் அம்பத்தூர் காவல் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.