சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு பணிகளை தி.நகர், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பணிசெய்துவரும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினார்.
13.11.2020 இரவு இரவு தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக அரசு.சிறப்பு பேருந்துகள் சிஎம்பிடி பேருந்து நிலையத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்பட்டு குற்றத்தடுப்புடன், போக்கு வரத்து நெரிசல் இல்லாமல் பராமரித்தும் பொதுமக்களுக்கு உதவிட சேவை மையங்கள் மூலம் பணி செய்துவரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. பார்வையிட்டும் பொது மக்களுக்கும் காவல்துறையினர் க்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
அதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்ற காவல் அதிகாரிகள், ஆளினர்களை நேரில் சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்க்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். தி.நகர் பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணியினை பார்வையிட்டு காவல் துறையினர்க்கும் பொது மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்களை பரிமாறி இனிப்புகள் வழங்கினார். இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 14.11.2020 காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் Sவிமலா, K.ஶ்ரீதர்பாபு, ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் சௌந்தர்ராஜன், ரவிச்சந்திரன், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.