பொதுமக்களுக்கும், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வரும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், அமைச்சுப் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்காக காவல் ஆணையரகத்தின் 5வது மாடியில் ஓய்வு அறைகள் கட்டப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் புதிதாக கட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கான 2 ஓய்வறைகளை 11.12.2020 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், கூடுதல் ஆணையாளர் தலைமையிடம், இணை ஆணையாளர், துணை ஆணையாளர் அமைச்சுப்பணி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூலம் மாதந்தோறும் தேர்வு செய்து காவல் ஆணையாளர் தலைமையில் பண வெகுமதி மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் கடந்த நவம்பர் மாதம் பணியிட அலுவல கத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த மைக்காக முதல் பரிசு பெற்ற போக்கு வரத்துப்பிரிவின், அலுவலக கண்காணிப் பாளர் சசிகலா மற்றும் இளநிலை உதவி யாளர் முத்துராமன் ஆகியோருக்கு முதல் பரிசாக ரூபாய்.2000/- மற்றும் வெற்றியாள ருக்கான சுழற்கோப்பையை வழங்கினார். மேலும், 2வது பரிசாக TAMR-II பிரிவின் உதவியாளர் கோபு மற்றும் இளநிலை உதவி யாளர் சிவசுப்ரமணியம் ஆகியோருக்கு ரொக்கப்பரிசு ரூபாய்.1,000/- மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஏ.அமல்ராஜ், (தலைமையிடம்) இணை ஆணையாளர் (தலைமையிடம்) மல்லிகா, இ.கா.ப, துணை ஆணையாளர்கள் பெரோஷ்கான் அப்துல்லா, (நிர்வாகம்), நுண்ணறிவு பிரிவு துணை ஆணையாளர்கள் S.விமலா, K.ஶ்ரீதர் பாபு, காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.