சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல்துறையினருக்கு உறுதுணையாகவும், பல்வேறு முக்கிய பணிக ளுக்கு உதவியாகவும், ஊர்க்காவல் படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை பெருநகரில் 4 மண்டலங்களுக்கு 8 கம்பெனிகள் வீதம் 32 கம்பெனி ( 4 பெண் ஊர்க்காவல் கம்பெனி உட்பட) ஊர்க்காவல் படை வீரர்கள் சென்னை பெருநகர காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 250 ஊர்க்காவல் படை வீரர்கள் இணைந்து, அவர்களது ஊர்க்காவல் படையில் 08.10.2020 அன்று இறந்த மோகனவேல் என்ற ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு மற்றும் கணவனை இழந்த பெண் ஊர்க்காவல் படையினருக்கு
உதவுவதற்காகவும், பண வசூல் செய்தனர். அதன்பேரில், இன்று (29.12.2020) காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் மேற்படி ஊர்க்காவல் படை வீரர்கள் வசூலித்த பணத்தில் ரூ.1,25,000/-க்கான காசோலையை இறந்த மோகனவேலின் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்கினார்.

மேலும், ஊர்க்காவல் படையில் கணவரை இழந்த 10 பெண் ஊர்க்காவல் படையின ருக்கு 10 தையல் இயந்திரங்கள் வழங்கி, அனைவரும் வாழ்வில் முன்னேறி தமது குடும்பத்தை நல்லமுறையில் உயர்த் திட வாழ்த்தியதுடன், சென்னை பெருநகர காவல்துறைக்கு உறுதுணை யாகவும், சிறப்பாகவும் பணி செய்து வரும் ஊர்க் காவல்படை வீரர்கள் அனைவரையும் வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையாளர் (போக்கு வரத்து/வடக்கு) எம்.பாண்டியன், ஊர்க்காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.